Thursday, November 12, 2009

கோழைக்கு காதல் என்ன?

நான் படும் கஷ்டங்கள் உனக்குத் தெரியவே தெரியாது அன்பே. நான் தான் இந்த வலிகளை அனுபவிக்கவேண்டும். நான் உன்னைப் பிரிந்து படும் வேதனையை நீ அறிவாயோ?

நிச்சயம் நீ அறியமாட்டாய் ... அறிந்தாலும் நம்பமாட்டாய் ... நீ என்றுமே என்னை அங்கீகரித்ததில்லையடி கண்ணே ... என் காதலை அங்கீகரித்ததில்லை அன்பே ..
நான் அதை நன்றாக அறிவேன்.. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் ... என் வலி என்னோடேயே இருக்கட்டும் ...

Wednesday, October 21, 2009

நீ அறிவாயோ கண்ணே?

முன்பெல்லாம் இளையராஜா பாடல்களைக் கேட்பது என்பது ஒரு கலவையான சந்தோசத்தை தரும். ஆனால் தற்போதெல்லாம் சந்தோசத்தை விட துக்கமே மேலோங்கி நிற்கிறது. அதற்க்கு என்ன காரணம்? நான் உன்னைப் பிரிந்த துயரத்தை இப்பாடல்கள் ஞாபகப்படுத்துவதுதான் காரணமா கண்ணே ?. என் பிரியமானவளே நான் உன்னைப் பிரிந்தது துயரப்படுவதை நீ அறிவாயோ?

Monday, October 19, 2009

தனி மரம்

ஒரு மிகப் பெரிய சமவெளியின் நடுவே நிற்கும் ஒரு தனிமரத்தை நீங்கள் கண்டு இருக்கிறீர்களா? அதைப் பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?

எனக்கு யாருமே தேவை இல்லை. நான் அனைவரையும் வெறுக்கிறேன். நான் தனிமையையே விரும்புகிறேன். நான் தனியாகவே இருக்க விரும்புகிறேன் என்று அம்மரம் சொல்வது போல் தோன்றுமா?

அல்லது எந்த ஒரு மரமும் வளர முடியாத இடத்தில் தனியாக வளர்ந்து கோலோட்ச்சி நிற்கும் அதன் தைரியம் உங்களுக்குத் தெரியுமா? பார், என்னைப் பார்! யாருமே வளர முடியாத இடத்தில் வளர்ந்து என்னுடைய ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் என் திறமையைப் பார் என்று சொல்வது போலத் தோன்றுமா?

சில நேரங்களில் நானும் ஒரு தனிமரம் போலவே உணர்கிறேன். ஆனால் மேற்கூறியவற்றில் நான் எவ்வகையைச் சேர்த்தி என்று தெரியவில்லை !